விமானப் பயணம் குறைவாக உள்ள இந்த பருவத்தில் சில குறிப்பிட்ட தடங்களில் பயணக் கட்டணக் குறைப்புச் செய்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.
ஏர் இந்தியா நிறுவனத்தால் சமீபத்தில் உயர்த்தப்பட்ட 24 தடங்களிலும் (NAP3), மேலும் 70 தடங்களிலும் (AP3) நடைமுறையில் உளள பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
இத்தடங்களில் பயணம் செய்வோரின் அடிப்படைக் கட்டணமும், பயணிகள் சேவைக் கட்டணமும்தான் வசூலிக்கப்படும், எரிபொருள் மிகை வரி (Fuel surcharge) வசூலிக்க்ப்பட மாட்டாது.
என்.ஏ.பி. தடங்களில் குறைக்கப்பட்டுள்ள கட்டண விவரங்கள் (ஒரு வழி பயணத்திற்கு மட்டுமான கட்டணம் இது):
மும்பையில் இருந்து ஹைதராபாத்திற்கு ரூ.2,079.00
மும்பையிலிருந்து பெங்களூருவிற்கு ரூ.2.779.00
மும்பையிலிருந்து கொச்சிக்கு ரூ.3,279.00
மும்பையிலிருந்து சென்னைக்கு ரூ.3,279.00
மும்பையிலிருந்து டெல்லிக்கு ரூ.3,279.00
டெல்லியில் இருந்து சென்னைக்கு ரூ.3,779.00
சிறப்பு ஏ.பி. தடங்களில் கட்டண விவரம்:
மும்பையிலிருந்து உதய்பூருக்கு ரூ.3,094.00
மும்பையிலிருந்து கோவா ரூ.3,094.00
மும்பையிலிருந்து கோழிக்கோடு ரூ.4,499.00
சென்னையிலிருந்து கோவா ரூ.4,499.00
மும்பையிலிருந்து திருவனந்தபுரம் ரூ.5.399.00
டெல்லியில் இருந்து ஹைதராபாத் ரூ.5.399.00
சென்னையிலிருந்து கொல்கட்டா ரூ.5,399.00
மும்பையிலிருந்து கொல்கட்டா ரூ.5,919.00
டெல்லியிருந்து பெங்களூரு ரூ.5,919.00
இந்தப் பயணக் கட்டணக் குறைப்பு செப்டம்பர் 20ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.