விஜய்யின் வேட்டைக்காரன் பன்ஞ் டயலாக்கும், குத்துப் பாடலுமாக பரபரவென வளர்ந்து வருகிறது. சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் செட் போட்டு கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வருகிறார்கள்.
webdunia photo
WD
வேட்டைக்காரன் விஜய்யின் 49 வது படம். மேலும் வில்லு, குருவி என இரு சுமார் படங்களுக்குப் பிறகு வெளியாகும் படம். நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலைமை.
வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட ஏவிஎம் திட்டமிட்டுள்ளது. ரஜினி, கமல், அஜித், விக்ரம், சூர்யா என யாருடைய படமும் வரும் தீபாவளிக்கு வெளியாகவில்லை. வேட்டைக்காரன் மட்டும்தான் ஒரே மாஸ் ஹீரோவின் படம். அதனுடன் போட்டி போட இருப்பது தனுஷின் குட்டி.
webdunia photo
WD
விஜய்யின் அழகிய தமிழ் மகன் வெளியான போது தனுஷின் பொல்லாதவன் ரிலீஸானது. அழகிய தமிழ் மகன் அவுட். பொல்லாதவன் ஹிட். வில்லு வெளியான போது படிக்காதவன் வெளியானது. வில்லு சுமார், படிக்காதவன் ஹிட்.