இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் பாரதிராஜா மறுபடியும் இயக்குனர் சங்கத் தலைவர் ஆகுகிறாருங்கோ!
800 உறுப்பினர்களோடு வடபழனி, குமரன் காலனியில் இயங்கிவரும் இந்த சங்கத்தின் முதல் தலைவரும் நம்ம பாரதிராஜாதாங்கோ!
தற்போது சங்கத் தலைவராக இருக்கிற எஸ்.ஏ. சந்திரசேகர் பதவிக்காலம் முடிந்துவிட்டதனால் இரண்டு வருடத்துக்கு ஒரு முறை நடக்கிற தேர்தலின்படி, இயக்குனர் இமயம் பதவி நாற்காலியில் உட்காரப் போறாரு. துணைத் தலைவராகப் பொறுப்பேற்று இமயத்துக்கு துணையா நிக்கப் போறது ஆர்.கே. செல்வமணி.
இனி தமிழ்த் திரையுலகில் இயக்குநர், துணை, துணை இயக்குநர்கள் பிரச்சனைகளை, சங்க வளர்ச்கிக்கும் தன்னை முழுமையா ஈடுபடுத்திக்கொள்ளப் போவதாக அல்லி நகரத்தார் அறிவிச்சிருக்காருங்கோ!