ராதாமோகனின் அபியும் நானும் முடியும் தருவாயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சி சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது.
த்ரிஷா வெளிநாட்டிலிருந்து வருவது போலவும், அவரது அம்மாவாக நடிக்கும் ஐஸ்வர்யா த்ரிஷாவை வரவேற்பதாகவும் காட்சி. நூற்றுக்கணக்கில் துணை நடிகர்களை வரவழைத்து சகப் பயணிகளாக நடிக்க வைத்தனர்.
இந்த அதிகப்படியான கூட்டத்தால் விமானப் பயணிகள் திணறிவிட்டனர். சிவாஜி படப்பிடிப்பில் ரஜினியை வேடிக்கைப் பார்த்தது போல், த்ரிஷாவையும் விமான நிலைய ஊழியர்கள் வேடிக்கைப் பார்த்ததால் சில மணி நேரங்களுக்கு விமான நிலையப் பணிகள் ஸ்தம்பித்தன.
விடியற்காலையில் பேக்கப் சொல்லும் வரை இந்த பரபரப்பு நீடித்தது.