நைனிடால் வங்கியில் 30 கிளார்க் பணியிடங்களுக்கு நிரப்பப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பணியின் பெயர்: கிளார்க்
காலியிடங்கள்: 30
கல்வி தகுதி: இளங்கலை பட்டம், முதுலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.09.2015 தேதியின்படி 18லிருந்து 37க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,765 - 31540
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. இதனை NTB Recruitment A/C Clerks-2015, கணக்கு எண். 0011000000000658, IFSC Code: NTBL0NAI001 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nainitalbankcareer.com என்ற வலைதள பக்கத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 10.11.2015
இதுகுறித்து, முழுமையான விவரங்கள் அறிய http://www.nainitalbank.co.in/pdf/ADVERISEMENT-Recruitment-Clerks.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.