டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், "மிகப்பெரிய வெற்றியைத் தந்த வாக்காளர்களுக்கு பாஜக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெருமை தரதக்க நிகழ்வு என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் அளித்த தீர்ப்பு மகழ்ச்சி அளிக்கிறது. பாஜவுக்கு மிகப்பெரும் பொறுப்பை மக்கள் அளித்துள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்துள்ளனர். திசைகளை தாண்டி நாடு முழுவதும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாகிறது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
நகர்புறத்தில் மட்டுமல்லாது கிராமப்புறத்திலும் பாஜக வேரூன்றியுள்ளது. பணக்காரர், ஏழை, நகரமக்கள், கிராமப்புற மக்கள் என அனைவரும் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். வெற்றி பெற்றுள்ள இந்த சூழலில் அனைவரும் அமைதி காக்க ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஜக தனியொரு கட்சியாக 1984-க்கு பிறகு இப்போதுதான் பெரும்பான்மை பெற்றுள்ளது என்று ராஜ்நாத்சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் கண்ட கனவை நனவாக்க பாஜக அரச பாடுபடும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய வெற்றி வரலாற்றை திருத்தி எழுதுவோம் என்றும் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.