கொரோனா காலத் தீபாவளியை மக்கள் எப்படி எதிர்கொள்வர் ??

ஏ.சினோஜ்கியான்
திங்கள், 9 நவம்பர் 2020 (21:51 IST)
ஒவ்வொரு வருடமும் தீபாவளி வருவது வாடிக்கைதான் என்றாலும் மக்கள் அதை உற்சாகத்துடன் வரவேற்பார்கள். தங்கள் உறவினரின் வீடுகளுக்குச் சென்றோ அல்லது உறவினர்களைத் தங்களின் வீடுகளுக்கு வரவழைத்தோ ஒன்றாகக் கடவுளை வணங்கி, விருந்து வைத்து, மகிழ்வார்கள்.

 ஆனாக் இந்த முறை யாரும் எதிர்பார்க்காமல் ஒரு கொரோனா தொற்று உலகத்தைப் பெரும்பாடாய் படுத்தி எடுத்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக மக்கள் வேலையிழந்திருந்த நிலையில் வாழ்வாதாரமின்றி பெரிதும் சிரமப்பட்டனர்.

நல்லபடியாக இந்தியா முழுக்க தற்போது ஓரளவுக்கு ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது அதனால் மக்கள் தம் எப்படியோ கிடைக்கும் வேலைக்குச் சென்று சமாளிக்கின்றனர்.

ஆனால் எப்போதும் போல் இந்த வருடமும் துணிமணிகளை எடுக்க நிச்சயம் பொருளாதாரம் தடைபோடும். ஆனால் பெற்றவர்கள் தாங்கள் எடுக்கவில்லை என்றாலும் கடன் வாங்கியாவதும் குழந்தைகளுக்கு எடுத்துக் கொடுப்பார்கள்.

இந்நிலையில், பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்து பிள்ளைகள் அதுவேண்டும் இதுவேண்டுமென அடம்பிடிக்காமல்,பொருளாதார நிலைமை உணர்ந்து இந்த வருட தீபாவளியை எளிமையாகக் கொண்டாடினால் அவர்களுக்கும் சுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கும்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்