இனி ஹர்திக் பாண்ட்யாதான் டி 20 அணிக்கு நிரந்தர கேப்டனா?

வியாழன், 29 டிசம்பர் 2022 (15:50 IST)
இந்திய டி 20 அணிக்கு இனிமேல் ஹர்திக் பாண்ட்யாதான் நிரந்தர கேப்டனாக செயல்பட போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக்கோப்பை தொடரை அரையிறுதியில் இருந்து தோற்று வெளியேறிய பின்னர் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் டி 20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி 20 கிரிக்கெட்டில் மூத்த வீரர்கள் இடம்பெறாதது நிரந்தரமானதா அல்லது இலங்கை தொடருக்கு மட்டுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது சம்மந்தமாக பரவி வரும் தகவல்களின் படி இனிமேல் டி 20 அணிக்கு ஹர்திக்தான் கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் ஒருநாள் அணிக்கு 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை மட்டுமே ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்