சாலை விபத்துகளில் ஒரு ஆண்டில் 1.53 லட்சம் மரணம்! – அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!

வியாழன், 29 டிசம்பர் 2022 (11:55 IST)
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 1.53 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் வாகன விபத்துகளும், உயிரிழப்புகளும் கூட அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்துகள் குறித்து ’இந்தியாவில் சாலை விபத்துகள் 2021’ என்ற தலைப்பில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, 2021ம் ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தம் 4,12,432 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளில் 1,53,972 பேர் பலியாகியுள்ளனர். 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டில் பொதுமுடக்கம் அமலில் இருந்ததால் 2021ஐ விட மிகவும் குறைவான விபத்துகளே பதிவாகியுள்ளது. ஆனால் 2019 உடன் ஒப்பிடுகையில் 2021ல் வாகன விபத்தால் ஏற்படும் பலிகள் 1.9 சதவீதம் அதிகரித்துள்ளன. காயம் அடைவது 14.8 சதவீதம் குறைந்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்