சச்சின் சாதனையை சமன் செய்த கோலி!? – எப்படி தெரியுமா?

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (10:51 IST)
நேற்று நடந்த உலக கோப்பை போட்டியில் விளையாடி சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி



ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 229 ரன்களை பெற்றிருந்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணியை 34 ஓவரில் 129 ரன்களில் சுருட்டி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் விராட் கோலி தனது 49 ஆவது சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அவர் ரன்னே அடிக்காமல் டக் அவுட் ஆனது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் விராட் கோலி டக் அவுட் ஆவது இதுவே முதல்முறை. எனினும் டக் அவுட் ஆன வகையில் சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி.

அதாவது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள், டீ 20 போட்டிகள் ஏன்னா அனைத்து வகைகளிலும் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் 34 முறை டக் அவுட் ஆன சாதனையை சச்சின் டெண்டுல்கர் செய்துள்ளார். நேற்று விராட் கோலி டக் அவுட் ஆனது மூலமாக சச்சினின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். எனினும் அடுத்த போட்டியில் நாற்பத்து ஒன்பதாவது சதத்தை அடித்து சச்சின் அதிக சதம் அடித்த சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்