ஒரே ஓவரில் இரண்டு கைகளாலும் பந்துவீசி இலங்கை வீரர் அசத்தல் [வீடியோ]

வியாழன், 4 பிப்ரவரி 2016 (14:41 IST)
இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் ஒரே ஓவரில், வலது கை மற்றும் இடது கைகளால் பந்துவீசி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளார்.
 

 
வங்கதேசத்தில் 19 வயதிற்கு உட்படோருக்கான உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதன் கடைசி லீக் போட்டியில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. மிர்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
 
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் எடுத்தது.
 
அதிகப்பட்சமாக ஹசன் மொஷின் 86 பந்துகளில் [8 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 86 ரன்களும், சல்மான் ஃபயாஷ் 33 ரன்களும் [3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] எடுத்தனர். இலங்கை தரப்பில் வனிது டி சில்வா, திலன் நிமேஷ், தமிந்த சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
 
பின்னர் ஆடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் 189 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்தப் போட்டியில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இலங்கை வீரர் சமிந்த மெண்டிஸ் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கையாலும், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கையாலும் பந்து வீசி அசத்தினார்.
 
4 ஓவர்கள் வீசிய கமிந்து மெண்டிஸ் 21 [5.25 ரன்ரேட்] ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதே சமயத்தில் இலங்கை தரப்பில் இந்த போட்டியில் அதிக ரன் குவித்தவரும் கமிந்து மெண்டிஸ் [68 ரன்கள்] என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ கீழே:
 

வெப்துனியாவைப் படிக்கவும்