ஐபிஎல் கிரிக்கெட்டின் 9-வது தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூரு அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் டெல்லி அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் அவமரியாதையாக பேசியுள்ளார்.
அவமரியாதையாக பேசிய பெங்களூர் வீரர் வாட்சனை போட்டி நடுவர் கண்டித்துள்ளார். ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் அவமரியாதையக பேசியது ஐபிஎல் தொடரின் முதல் கட்ட விதிகளை மீறிய செயலாகும் என அறிக்கை வெளியிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
இருப்பினும் தன்னுடையை தவறை ஷேன் வாட்சன் ஒத்துக்கொண்டதால் கண்டிக்கப்பட்டுள்ளார். அவர் மீது வேறு ஏதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.