நான் உணர்ச்சிகளை அதிகமாக வெளிப்படுத்தாவதன்.. ஆனால்?- RCB கேப்டன் ரஜத் கருத்து!

vinoth

சனி, 15 மார்ச் 2025 (14:28 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆர் சி பி அணிக்குக் கேப்டனாக செயல்படவுள்ளது குறித்து பேசியுள்ள ரஜத் “நான் களத்தில் அதிகமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டேன். ஆனால் போட்டியின் நிலவரத்தை உற்று நோக்குவேன்.அணிக்காக துணை நிற்பது அவசியமான ஒன்று. அணி வீரர்களை எப்போதும் பதற்றமில்லாமலும் நம்பிக்கையோடும் வைத்திருக்க உதவுவேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்