இந்த நிலையில், பிளே ஆப் சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ஐபிஎல் -16 வது சீசன் இறுதிப் போட்டிக்கு 10 வது முறையாக நுழைந்துள்ளது.
ஐபிஎல் 2023 குவாலிஃபையர் -2 போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், இதில், எந்த அணி ஜெயிக்கிறதோ அந்த அணி, இறுதிப் போட்டியில் சென்னை கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் இறுதிப் போட்டியில் எந்த அணி ஜெயித்து கோப்பையை வெல்லும் என்று உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் ஐபிஎல் நிறைவு விழாவில், கனடா நாட்டு பிரபல பாடகி ஜொனிதா காந்தி பாடவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.