என் வாழ்க்கையில் கேட்ட அதிகபட்ச சத்தம் இதுதான்… பேட் கம்மின்ஸ் ஆச்சர்யம்!

vinoth

சனி, 6 ஏப்ரல் 2024 (10:09 IST)
சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும் கடைசி கட்டத்தில் ரன்கள் குவிக்க முடியாமல் தினறியது.

இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிவம் துபே அதிகபட்சமாக 45 ரன்கள் சேர்த்தார். இந்த எளிய இலக்கோடு களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. அந்த அணியின் அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதையடுத்து வந்த மார்க்ரம், டிராவிஸ் ஹெட் ஆகியோரும் சிறப்பாக விளையாட அந்த அணி 19 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது.

கடந்த சில சீசன்களாக சென்னை அணி விளையாடும் போட்டிகளின் போதெல்லாம் தோனி எப்போது களமிறங்குவார் என ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இறுதி ஓவர் நெருங்க நெருங்க சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகவேண்டும் என வேண்டிக் கொள்கின்றனர். இந்நிலையில் நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி 2 பந்துகள் சந்தித்து 1 ரன் சேர்த்தார். அவர் இறங்கிய போது ரசிகர்கள் காது ஜவ்வு கிழிந்துபோகும் அளவுக்கு கோஷம் எழுப்பினர். அதுபற்றி பேசியுள்ள ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் “நான் கேட்டதிலேயே இதுதான் அதிகபட்ச சத்தம் . தோனி பேட்டிங் செய்ய வந்த போது ரசிகர்கள் பரவச நிலையை அடைந்துவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்