தென் ஆப்பிரிக்க அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று – திட்டமிட்ட படி தொடர் நடக்குமா ?

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (15:08 IST)
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் மேலும் ஒரு வீரருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து அணி இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று 3 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்காக வீர்ரகளுக்கு இடையேயான பயோ பபுள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு வீரருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த வீரரும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இரு வீரர்களும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமே அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதித்த வீரர் யார் என்றும் தனிமைப்படுத்தப்பட்ட 3 வீரர்கள் யார் என்பதையும் அறிவிக்க மறுத்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று எடுக்கப்பட்ட மறு பரிசோதனையில் தென் ஆப்பிரிக்க அணியின் மேலும் ஒரு வீரருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த வீரரும் பயோ பபுளில் இருந்து வெளியேற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதன் மூலம் நான்கு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்ட நிலையில் திட்டமிட்ட படி தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்