கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரரான விராட் கோலியும், ஆப்கன் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக்கும் மோதலில் ஈடுபட்டனர். இதன் பிறகு அவரை இந்திய ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அவரும் பதிலுக்கு விராட் கோலியை ட்ரோல் செய்தார்.
இதையடுத்து கோலி பேட் செய்த போது நவீன் உல் ஹக் அவரிடம் சென்று கைகொடுத்து சமாதானம் ஆனார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக நடந்து வந்த பனிப்போர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இப்போது உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ள நவீன் உல் ஹக் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து டி 20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடுவேன் என்றும் அறிவித்துள்ளார்.