அரையிறுதி போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் கோலி… இந்த முறையாவது ஜொலிப்பாரா?

செவ்வாய், 14 நவம்பர் 2023 (07:32 IST)
இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டிகளில் 9 போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் நாளை நான்காவது இடத்தில் உள்ள நியுசிலாந்து அணியை முதல் அரையிறுதி போட்டியில் எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு விராட் கோலியின் பேட்டிங் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுவரை இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் 9 போட்டிகளில் விளையாடி 2 சதங்களோடு 594 ரன்கள் சேர்த்துள்ளார்.

ஆனால் இதுவரை மூன்று உலகக் கோப்பை தொடர்களின் அரையிறுதிப் போட்டியில் விளையாடியுள்ள அவர் இதுவரை ஒருமுறை கூட 10 ரன்களை கடந்து அடித்ததில்லை என்பது தொடரும் சோகம். 2011 ஆம் ஆண்டு அரையிறுதியில் 9 ரன்கள் சேர்த்த அவர், 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு அரையிறுதிகளில் 1 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் இந்தமுறை அவரின் மோசமான ஆட்டத்திறன் முடிவுக்கு வந்து ஜொலிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்