இந்நிலையில் இந்திய அணிக்கு ஒரே ஆறுதலாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார். அவர் இந்த போட்டியில் 6 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து பந்து வீசினால் காயம் அதிகமாகும் என்பதால் அவர் இனி பந்து வீச மாட்டார் எனத் தெரிகிறது.