கபில் தேவ் சாதனையை முறியடிப்பாரா ஜடேஜா?

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2018 (16:27 IST)
இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணி மோது ஒருநாள் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. 
 
முதல் ஒருநாள் போட்டி வரும் 21 ஆம் தேதி கவுகாத்தியில் துவங்குகிறது. இந்நிலையில், பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் கபில் தேவின் சாதனையை முறியடிக்க ஜடேஜாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 
 
கபில் தேவ் 42 போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதுதான் இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக எடுத்துள்ள அதிகபட்ச விக்கெட்டுகள் ஆகும்.
 
இந்நிலையில் கபில்தேவின் இந்த சாதனையை முறியாடிக்க ஜடேஜாவுக்கு இன்னும் 15 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. ஜடேஜா பந்துவீச்சில் நல்ல பார்மில் இருப்பதாலும், அவர் இந்த சாதனையை முறியடிப்பார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்