இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு அணியின் சீருடை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கொரொனாப் பேரிடர் காலத்தில் முன்களப் பணியாளர்களைக் கவுரவப்படுத்தும் விதத்தில் நீல நிற ஜெர்ஸி அணிந்து விளையாடவுள்ளதாக அந்த அணியின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.