இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை தொடர் லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியைக் காண ஒரு லட்சம் இருக்கைகள் கொண்ட மைதானத்தின் அரங்கம் முழுவதும் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாத ஷுப்மன் கில் இன்றைய போட்டியில் அணியில் இணைந்துள்ளார்.