இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிரஹாம் தோர்ப் மாரடைப்புக் காரணமாக இன்று காலமாகியுள்ளார். அவரின் மறைவை உறுதி செய்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் “தோர்ப் காலமானார் என்ற செய்தியை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். இந்த அதிர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் போதவில்லை” என வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.