உலக அமைதிக்காக மகாகாளேஷ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர்

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (15:08 IST)
உலக அமைதிக்காக வேண்டி, மகாகாளேஷ்வர் கோயிலில் பிரபல கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ்.சாமி  தரிசனம் செய்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரில் பிரசித்தி பெற மகாகாளேஷ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கும், கிரிக்கெட்  நட்சத்திரங்களும், சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த 4 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பெங்களூர் ராயர் சேலஞ் என்ற ஐபிஎல் அணியின் கேப்டனுமான கோலி, தன் மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் குழந்தையுடன் இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம்ன செய்தார்.

அதேபோல், கடந்த மாதம் கிரிக்கெட் வீரர் அக்சர் படேல் மற்றும் அவரது மனைவி இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட கே.ஏல்.ராகுல் மற்றும் ஆதியா ஷெட்டி இக்கோயிலுக்கு வந்து, வழிபாடு செய்தனர்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்ணி பந்துவீச்சாளார் உமேக்ஷ் யாதவ், இன்று இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ததுடன் பஸ்ம ஆரத்தி நிகழ்விலும் அவர் கலந்துகொண்டார்.

மேலும், ‘உலக அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான கோவியில் சுவாமி தரிசனம் செய்ததாக உமேஷ் யாதவ் ‘தெரிவித்துள்ளார்.
 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்