வங்கதேச பிரீமியர் லீக்கின்(BPL) இறுதி போட்டி டாக்கா டைனமைட்ஸ் மற்றும் ரங்பூர் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற டாக்கா டைமண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜான்சனும் க்ரிஸ் கெயிலும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலே ஜான்சன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்தபடியாக மெக்கல்லம் களமிறங்கினார்.
கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. கெயில் 69 பந்துகளில் 18 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடித்து 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மெக்கல்லம் 43 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடித்து 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் டி-20 யில் 11,000 ரன்கள், 20 சதங்கள், 819 சிக்சர்கள் குவித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை கெயில் பெற்றுள்ளார். சாதனைகள் படைத்து வரும் கிறிஸ் கெயிலை பலரும் பாராட்டி வருகின்றனர்.