அழுத ஸ்மித்திற்கு அனுதாபம் தெரிவித்த அஸ்வின்!

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (10:42 IST)
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டு, கண்ணீர் விட்டு அழுத ஸ்டீவன் ஸ்மித்துக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்.
 
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய  அணியின்  பந்தை சேதப்படுத்தி விவகாரத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு விளையாட தடை, கேப்டன் பதவி ஏற்க இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. மேலும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் விளையாட தடை விதித்து உத்தரவிட்டது.
 
இதனையடுத்து, ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் என்ற முறையில் நானே பொறுப்பேற்கிறேன் என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
 
அவர் கண்ணீர் விட்டு அழுததற்க்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் அஸ்வின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்த உலகம் உங்களை அழுக வைக்க வேண்டும் என்று விரும்பிகிறது. நீங்கள் அழுதால் அவர்கள் திருப்தியடைந்து விடுவார்கள். அனுதாபம் என்பது வார்த்தையாக மட்டுமல்ல, அது மக்களிடம் இருந்திருக்க வேண்டிய ஓர் உணர்வு. இந்த விவகாரத்தில் இருந்து வெளிவர கடவுள் ஸ்மித் மற்றும் பான்கிராப்டிற்கு அனைத்து வகை வலிமையும் தருவார். மேலும், வார்னரும் இந்த சம்பவத்தில் போராடி வெளி வரவேண்டும், அவர்களுடைய கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு முழு ஆதரவு அளிப்பார்கள் என் நம்புகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்