தோனியின் இறந்த முதல் காதலி இவரா...? இணையத்தில் வெளியான புகைப்படம்!

சனி, 22 மே 2021 (14:08 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பயோபிக் படத்தில் அவரின் வாழ்வில் நடந்த பல சம்பவங்களை பார்த்துள்ளோம். அதில் மனைவி சாக்ஷிக்கு முன்னரே ஒரு காதலி இருந்தது தெரியவந்தது. அவர் விபத்தில் இறந்துவிட்டதாக அந்த படத்தில் தெரிவித்திருந்தனர். ஆனால், உண்மையில் அது யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. 
 
படம் வெளியான பிறகு நிறைய பேட்டிகளில் தோனியிடம் அவரின் முன்னாள் காதலி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதற்கெல்லாம் அவரின் புன்னகையே பதிலாக இருந்தது. இந்நிலையில் தற்போது  தோனியின் முன்னாள் காதலி என கூறி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், உண்மையில் அது தோனியின் மனைவி சாக்ஷி தான். இது சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் முசோரியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்