2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்து இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி.
பணமதிப்பு நீக்க பாதிப்பை நீக்க புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.
செல்லாத நோட்டு அறிவிப்பு அதிகமான வரி வருவாய்க்கு வழிவகுக்கும். வங்கிகளுக்கான வட்டி வீதங்கள் ஆண்டின் தொடக்கத்திலேயே குறைந்துள்ளதே இதற்கு ஆதாரம்.
பல தசாப்தங்களாக வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு எதிராக செல்லாத நோட்டு அறிவிப்பு என்ற உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் வரும் வருவாய் எதிர்கால திட்டங்களை செயல்படுத்த உதவும் என அருண் ஜெட்லி கூறுயுள்ளார்.