பப்ளிக் ஃபிகர்தான் பப்ளிக் ப்ராபர்ட்டி அல்ல; ஆவேசமடைந்த வித்யாபாலன்

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (19:50 IST)
அனுமதி இல்லமல் தோளில் கைப்போட்ட ரசிகர் மீது நடிகை வித்யா பாலன் ஆசேவமடைந்து நாங்கள் பிரபலங்கள் தான், பொது சொத்து அல்ல என தெரிவித்துள்ளார்.


 

 
பாலிவுட்டில் தனக்கென ஒருபிடித்து மிகவும் பிரபலமாக இருப்பவர் நடிகை வித்யா பாலன். அண்மையில் இவர் நடித்து இருக்கும் பேகம் ஜான் படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில் அவரது நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் பேகம் ஜான் பட குழுவினருடன் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்தபோது ரசிகர் ஒருவர் வந்து வித்யா பாலனுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டுள்ளார். ரசிகளுடன் செல்ஃபி எடுப்பது சகஜம் தானே என அவரும் அனுமதி அளித்துள்ளார். ஆனால் அந்த ரசிகர் அவரது அனுமதியில்லாமல் தோளில் கை போட்டுள்ளார். 
 
அனுமதியில்லாமல் தொடுவது சரியில்லை என்று வித்யா பாலன் ரசிகரிடம் கூறியுள்ளார். மீண்டும் ஒரு செல்ஃபி என கேட்டு, மீண்டும் தொட்டுள்ளார். இதனால் வித்யா பாலன் கொபமடைந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். கோபமடைந்த வித்யா பாலன் நாங்கள் பிரபலங்கள் தான், ஆனால் பொது சொத்து அல்ல என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்