தோனி பட நடிகர் தற்கொலை: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 14 ஜூன் 2020 (14:53 IST)
தோனி பட நடிகர் தற்கொலை: அதிர்ச்சி தகவல்
பிரபல பாலிவுட் நடிகரும் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தவருமான  நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
பிரபல கிரிக்கெட் வீரரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் எம்.எஸ்.தோனி. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் தோனியின் கேரக்டரில் நடித்ததால் மிகப் பெரிய புகழை பெற்றார் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் 
 
இவர் கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாக திடீரென இன்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்  அவர்களின் தற்கொலை செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பாலிவுட் பிரபலங்களும் அதிர்ச்சியுடன் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்