3 பட தனுஷ் போல் பல குரல்களை கேட்க துவங்கினார் சுஷாந்த் - மிரண்டு போன காதலி!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (10:39 IST)
பிரபல பாலிவுட் நடிகரும் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தவருமான நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தத்தின் காரணமாக திடீரென கடந்த ஞாயிற்று கிழமை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இவரது மரணத்தில் ஒளிந்திருக்கும் பல விஷயங்கள் குறித்து அவருடன் நெருங்கி பழகிய பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். பிரபல தயாரிப்பளார்  மகேஷ் பட்டின் நெருங்கிய நண்பரான எழுத்தாளர் சுஹ்ரிதா தெரிவித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. " சுஷாந்தின் மனதில் பல குரல் பேசுவது போன்ற ஒரு நோய் இருந்துள்ளது. அதாவது 3 படத்தில் நடிகர் தனுஷிற்கு இருக்கும் நோய் போன்று...

ஒருநாள் படவாய்ப்பிற்காக மகேஷ் பட்டை சந்திக்க சென்ற சுஷாந்த் அவரிடம் குவாண்டம் ஃபிசிக்ஸ் குறித்து மிகவும் உற்சாகமாக பேசியிருக்கிறார். அவரது அதீத ஆர்வத்தில் இருந்த மன அழுத்தத்தை மகேஷ் பட் அடையாளம் காட்டியுள்ளார். இந்த நோய் குறித்து சுஷாந்தின் காதலி ரியா சக்ரவர்த்திக்கும் தெரியுமாம். ரியா பலமுறை இந்நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்ள கூறியும் சுஷாந்த் அதனை மறுத்துள்ளார்.

ஒரு நாள் ரியா - சுஷாந்த் இருவரும் வீட்டில் அமர்ந்து அனுராக் காஷ்யாப்-ன் படத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது சுஷாந்த்,  "நான் அனுராக் கஷ்யாபின் பட வாய்ப்பை மறுத்து விட்டேன். அவர் இப்போது என்னை கொலை செய்ய வரப்போகிறார்"என்று பயத்துடன் சொல்லியிருக்கிறார்.  அப்போது சமாதானப்படுத்தி நிலைமை சரியாகிவிடும் என நினைத்த ரியாவிடம்  "என்னை மக்கள் எல்லாம் சேர்ந்து கொலை செய்யப்போகிறார்கள். நான் எப்படி அவர்களிடம் இருந்து தப்பிப்பது" என்று பலமுறை அவரிடம் கேட்டுள்ளாராம். இதனால் பயந்துபோன ரியா சுஷாந்த்துடன் இருப்பது ஆபத்து என நினைத்து அவருடனான காதலை முறித்துக்கொண்டுள்ளார்.

இந்த லாக்டவுன் நேரத்தில் சுஷாந்த்தின் தனிமை அவரை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்குள்ளான அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார் எழுத்தாளர் சுஹ்ரிதா செங்குப்தா. இந்த விஷயம் கேட்டு அவருக்குள் இப்படி ஒரு நோய் வைத்துக்கொண்டு எப்படி படங்களில் நடித்துவந்தார் என பலரும் கவலைகொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்