பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா !

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (12:53 IST)
பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக 2 லட்சத்தை தாண்டி அதிகரித்து வருகிறது. 
 
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 1,341 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந்தது.
 
இதனிடையே கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை செய்த பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சற்று முன் தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்