இது என்னடா புதுசா இருக்கு.. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள் - நடிகர் புகார்

Webdunia
திங்கள், 16 ஜூலை 2018 (15:25 IST)
பட வாய்ப்புகாக என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என மலையாள நடிகர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக நடிகைகள் பலர், திரையுலகில் படத்தில் நடிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றால் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் மலையாள நடிகர் நவஜித் நாராயணன், பட வாய்ப்பிற்காக தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்
 
மஞ்சு வாரியரின் ஆமி உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ள நவஜித் நாராயணன் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறியுள்ளார். ஒரு இயக்குநரின் வீட்டிற்கு நான் சென்றிருந்தேன்.
 
வீட்டில் யாரும் இல்லாததால், எனக்கு அவரே டீ போட்டுக் கொடுத்தார். பின் என் அருகே வந்து அமர்ந்துகொண்டு, உனக்கு நடிக்க நான் சான்ஸ் கொடுத்தால் எனக்கு என்ன செய்வாய் என கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சட்டென்று அவர் என்னை கண்ட இடத்தில் தொட ஆரம்பித்தார். 
 
அதிர்ச்சியடைந்த நான் அவரை கீழே தள்ளினேன். அவரை ஓங்கி ரெண்டு அறைந்துவிட்டு அங்கிருந்து வந்தேன். அந்த இயக்குநரின் பெயரை நான் கூற விரும்பவில்லை.
 
இதனை நான் வெளிப்படையாக சொல்வதால், பலர் என்னை கிண்டலடிக்கின்றனர். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. திரையுலகில் ஆண்களுக்கும் இந்த மாதிரியான தொல்லைகள் இருக்குறது என்பதை வெளியுலகிற்கு சொல்ல வேண்டியது என் கடமை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்