தனுஷுடன் கொடி படத்தில் நடித்த மலையாள நடிகை அனுபமா பரமேஷ்வரன் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
மலையாள திரையுலகில் பிரேமம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அனுபமா பரமேஷ்வரன். அந்த படத்தின் மூலம் பயங்கர ஃபேமஸ் ஆனார் அனுபமா.
அதன் பின்னர் தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்பொழுது அவர் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் குரு பிரேமகோஷம் என்ற படத்தில் நடித்து வந்த அனுபமா திடீரென படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அனுபமாவிற்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் மயங்கியதாக தெரிவித்தனர். ஒரு வார காலம் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.