இராணுவ இரகசியங்களை சீனாவுக்கு விற்ற குற்றச்சாட்டில் தென்கொரிய அதிகாரி கைது

Webdunia
சனி, 4 ஜூலை 2015 (20:26 IST)
தென்கொரியாவின் இராணுவ இரகசியங்களை சீனாவிடம் கசியவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டின் கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
இந்த அதிகாரி சீனாவுக்கு படிக்கச் சென்றபோது அங்கு பணத்துக்காக இரகசியத் தகவல்களை வழங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.
 
வெளிநாட்டினரின் வேவுப் பணிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான தென்கொரியாவின் பாதுகாப்புக் கட்டளைத் தலைமையகத்தில் வேலைபார்த்த அதிகாரி அவர்.
 
ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இரகசியத் தகவல்களை வழங்கிய குற்றத்துக்காக இதே கட்டளைத் தலைமையகத்தைச் சேர்ந்த வேறு இரண்டு அதிகாரிகளுக்கு சென்ற மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.