பாகிஸ்தான் - 'அத்துமீறிய இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்'

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (10:24 IST)
சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியன் சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - 'இந்திய உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது'

எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து வந்த இந்திய உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.
சிறியரக இந்திய உளவு விமானம் ஒன்று, சங்க் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி வந்தது. உளவு பார்ப்பதற்காக, பாகிஸ்தான் பகுதிக்குள் 600 மீட்டர் தூரம்வரை அத்துமீறி நுழைந்தது. இந்திய விமானத்தின் அந்த ஆத்திரமூட்டும் செயலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது என்று பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் இதுபோன்ற தேவையற்ற செயல்கள், ஏற்கனவே வகுக்கப்பட்ட விதிமுறைகளையும், இருநாட்டு வான்வழி ஒப்பந்தத்தையும் மீறிய செயலாகும். மேலும், 2003-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் அவமரியாதை செய்வதை இந்த ஊடுருவல் உணர்த்துகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்