ரோபோக்கள் எனப்படும் இயந்திர மனிதனால் மனிதனைப் போல சிந்திக்க முடியுமா என்பது குறித்த பிபிசியின் காணொளி.
மனிதர்களை விட இயந்திர மனிதன் பல விஷயங்களில் சிறப்பாக செயற்பட முடியும். ஆனால், எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எப்படி முகம் கொடுப்பது என்பதில் தான் இந்த ரோபோக்களுக்கு இன்னமும் கொஞ்சம் சிரமம் இருக்கிறது.
ஆனால், அதனை மாற்ற பிரிட்டிஷ் மற்றும் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்த இயந்திர மனிதர்களுக்கு, தாமே சிந்தித்து செயற்படக் கூடிய ஆற்றலைக் கொடுக்க, அவர்கள் எத்தனிக்கிறார்கள்.