'வங்கதேசத்தில் எழுத்தாளர்களை கொலை செய்ய இலவச அனுமதி' என்று குற்றச்சாட்டு

Webdunia
சனி, 4 ஜூலை 2015 (20:09 IST)
வங்கதேச தலைநகர் டாக்காவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஒரு நாத்தீக எழுத்தாளரின் மனைவி, தீவிரவாதிகளின் வன்செயல்கள் குறித்து பாரா முகமாக இருப்பதாக அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
 

 
வங்கதேச - அமெரிக்க எழுத்தாளரான அவிஜித் ரோய் அவர்கள் கடந்த பெப்ரவரியில் தாக்குதலுக்கு உள்ளாகி, இறந்தது முதல், மேலும் இரு மதசார்பற்ற எழுத்தாளர்களும் அங்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
 
பிபிசியிடம் பேசிய அவரது மனைவியான ராபிதா அஹ்மட் பொன்யா அவர்கள், பட்டப்பகலில் கொலைகளை செய்வதற்கு தீவிரவாதிகளுக்கு வங்கதேச அரசாங்கம், இலவச அனுமதியை வழங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.