தனுசு: ஆவணி மாத ராசி பலன்கள்

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (15:15 IST)
மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம் - அதிகார தோரணையும், கம்பீரமான தோற்றமும் உடைய தனுசு ராசியினரே நீங்கள் எளிதாக பழகக் கூடியவர். இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். 

சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை  ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.  அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. 
 
தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது  வியாபாரம் நன்கு நடக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். 
 
ராசிக்கு 2ம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன்  அனுசரித்து செல்வதும்,  வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.  பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. 
 
பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். அரசியல்துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும்.  மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். 
 
மூலம்: உடல் நிலையானது சற்று சோர்வுடன் இருந்தாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியே இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. 
 
பூராடம்: எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணி புரியும் பெண்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. பண  வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களைத் திரும்பப்  பெறுவதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். 
 
உத்திராடம் 1ம் பாதம்: கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போர் சிறு சிறு விரயங்களையும் தேவையற்ற அலைச்சல்களையும் எதிர்  கொள்ள நேரிடும். மக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. உடனிருப்பவர்களால் சில  மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். 
 
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 07, 08
 
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 29, 30
 
பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து சிவனை வணங்குவது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்