அக்டோபர் மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – ரிஷபம்!

Prasanth Karthick
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (08:59 IST)
கிரகநிலை:
ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன் - பஞசம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சனி (வ) - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
06-10-2024 அன்று புதன் பஞசம  ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
14-10-2024 அன்று சுக்கிரன்  சுக  ஸ்தானத்தில் இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
17-10-2024  அன்று சூர்யன் பஞ்சம  ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-10-2024 அன்று செவ்வாய் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-10-2024 அன்று புதன் பஞசம  ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:
இனிய சுபாவமும், மென்மையான பேச்சும்  உடைய ரிஷபராசியினரே

இந்த மாதம் பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். தம்பதிகளிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும். 

கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம்.

பெண்களுக்கு எதைபற்றியாவது நினைத்து கவலைபடுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை.  விருந்து நிகழ்ச்சியில் பங்கு பெறுவீர்கள். சந்தோஷங்கள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு  கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்:  பவுர்ணமி தோறும் அம்மனை வழிபட்டு வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனகவலை நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30, 31

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்