நவம்பர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (14:27 IST)
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
 
கிரகநிலை: ராசியில்  செவ்வாய்(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்  - தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர  ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - அஷ்டம  ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில்  ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
கிரகமாற்றங்கள்:
04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
தம்மை போலவே மற்றவர்களும்  காலத்தை வீணாக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் மீன ராசியினரே இந்த மாதம் பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். 
 
தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய  வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.  பழைய பாக்கிகள் வசூலாகும்.  கடன் வசதி கிடைக்கும். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். 
 
குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும்.  பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து  கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும். 
 
பெண்களுக்கு எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து  திருப்தி தரும்.
 
மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.  கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும்.  உற்சாகமாக காணப்படுவீர்கள்.
 
அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி  அங்கீகாரத்தைப் பெறுவர்.
 
கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன  பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது.
 
பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம்  உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் விருத்தியடையும்.  தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.
 
உத்திரட்டாதி:
இந்த மாதம்  ஏற்கனவே  வரவேண்டி இருந்து  வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும்.  குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடுவாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள்.
 
ரேவதி:
இந்த மாதம்  வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  நேரிடலாம். மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.
 
பரிகாரம்: குருவிற்கு வியாழக்கிழமையில் கொண்ட கடலை நிவேதனம் செய்து வணங்குவதும்  வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்