2025ம் ஆண்டில் இந்த 3 ராசிக்காரர்கள்தான் பணக்காரர்கள்! தீர்க்கதரிசி பாபா வெங்கா கணிப்பு!

Prasanth Karthick
செவ்வாய், 26 நவம்பர் 2024 (14:52 IST)
2025ம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நிகழும் என்று மறைந்த பாபா வெங்கா கணித்த தகவல்கள்


 
உலகத்தில் வாழ்ந்து மறைந்த பல ஞானிகள், தீர்க்கதரிசிகளில் ஒருவராக பாபா வெங்கா கருதப்படுகிறார். பல்கேரியாவில் பிறந்த இவர் கடந்த 1994ல் மறைந்தார். தீர்க்கதரிசனம் பெற்ற இவர் அடுத்த பல ஆண்டுகளுக்கு உலகில் நடக்க போகும் சம்பவங்களை கணித்த நிலையில் அவற்றில் பல நடந்தும் உள்ளதாக கூறப்படுகிறது.

பாபா வெங்கா கணிப்பின்படி 2025ல் செல்வம் கொழிக்கும் வாய்ப்புள்ள ராசிகள்:
 
மேஷம்:
பாபா வெங்காவின் கூற்றுப்படி, 2025ம் ஆண்டில் மேஷ ராசியினருக்கு சிறப்பான செயல்கள் யாவும் நடந்தேறும். அனைத்து துறைகளிலும் இவர்களின் வளர்ச்சி இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு பலனும் அவர்களுக்கு கிடைக்கும். காரிய தடைகள் இருக்காது. அவர்களின் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வ செழிப்பு அதிகரிக்கும். சமூக அந்தஸ்து உயரும்.

கடகம்: பாபா வெங்காவின் கணிப்பில் கடகம் ராசி முக்கியத்துவும் வாய்ந்ததாக உள்ளது. கடகத்தில் சந்திரன் ஸ்தான அதிபதியாக பல நன்மைகளை செய்யப் போகிறார். தங்கள் கடின உழைப்புக்கான பலன்களை பெறுவார்கள். அவர்கள் ஜாதக கிரஹ நிலை வலுவாக இருக்கும். அதன் காரணமாக வாழ்க்கையில் அபரிமிதமான மகிழ்ச்சி இருக்கும். நிதி நெருக்கடிகளில் இருந்து விடுதலையாவதுடன் சேமிப்பும் அதிகரிக்கும். 2025ம் ஆண்டு புதிய வேலைகளை தொடங்க சிறந்த ஆண்டாக இருக்கும்.

மிதுனம்: மிதுன ராசியினருக்கு அவர்களது வாழ்வின் பொன்னான ஆண்டாக 2025 இருக்கும். வாழ்வின் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் எல்லா வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள். நிதி நெருக்கடி குறையும். பெரிய அளவில் நிதி கிடைக்கும். திறமையுடனும், முழு ஈடுபாட்டுடனும் எந்த செயல்களையும் செய்தால் அவர்கள் நினைத்த உயரத்தை எட்ட முடியும் என பாபா வெங்கா கணிக்கிறார்.

குறிப்பு: மருத்துவம், உடல்நலம், யோகா, மதம், ஜோதிடம், வரலாறு, புராணங்கள் தொடர்பான தலைப்புகளில் வெப்துனியாவில் பிரசுரமாகும் கட்டுரைகள், ஒளிபரப்பாகும் வீடியோக்கள் பல்வேறு செய்தி ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் ஆகும். இதன் நம்பகத்தன்மையை வெப்துனியா உறுதிப்படுத்தவில்லை. உடல்நலம் மற்றும் ஜோதிடம் தொடர்பான எந்தவொரு பரிசோதனையும் செய்வதற்கு முன்பு, அது தொடர்பான நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது. இந்த உள்ளடக்கம் பொதுநலன் கருதி பிரசுரிக்கப்படுகிறது. இதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்