இந்த ராசிக்காரர்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்! – இன்றைய ராசி பலன்கள்(19.03.2024)!

Prasanth Karthick
செவ்வாய், 19 மார்ச் 2024 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்:
இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது.  சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

ரிஷபம்:
இன்று தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். தோயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

மிதுனம்:
இன்று மிகவும் நன்றாக இருக்கும். வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். பணவரத்து தாமதமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

கடகம்:
இன்று அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

சிம்மம்:
இன்று எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும்.  எதிர்ப்புகள் நீங்கும்.  தைரியம் கூடும். பணவரத்து திருப்திதரும். அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி:
இன்று வீண்செலவு காரிய தடை ஏற்படும். எனினும் முயற்ச்சித்தால் செல்வ சேர்க்கையும் எதிலும் வெற்றியும் கிடைக்கும். எதிலும் வேகம் காட்டுவீர்கள். உல்லாச பயணம் செல்ல நேரிடும். சொந்த பந்தங்களிடம் அளவுடன் பழகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். செயல்திறன் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

துலாம்:
இன்று வியாபாரம் தொடர்பான செலவும் இருக்கும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம். உத்தியோகம் நிமித்தமாக இடமாற்றம் ஏற்படும். உங்களுக்கான வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்து பாராடுகள் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

விருச்சிகம்:
இன்று சற்று எச்சரிக்கையுடன்  எதையும் செய்வது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் முழு கவனத்துடன் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்யம் உண்டாகும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அடுத்தவர்களுக்காக விட்டு கொடுத்து செல்வீர்கள். உத்தியோகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். மனதில் ஏதேனும் கவலை இருக்கும்.  வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

தனுசு:
இன்று உடல் உழைப்பு அதிகமாகும். புதுதெம்பும் உற்சாகமும் உண்டாகும். புதிய பதவி தேடிவரும். பண கஷ்டம் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எனினும் யோகமான பலன்கள் நடைபெறும். எதிர்ப்புகள் விலகும் தொழில் வியாபார போட்டிகள் நீங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சு திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

மகரம்:
இன்று சகோதர வழியில் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள்.  மற்றவர்கள் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் உண்டாகலாம். யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பது நல்லது. குறிப்பாக தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மையை தரும். நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு  உண்ண வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

கும்பம்:
இன்று வாழ்க்கைதுணை அனுகூலமாக இருப்பார்.  மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளின் போதும் வாகனத்தில் செல்லும் போதும் கவனமாக இருப்பது நல்லது. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கலைத்துறையினருக்கு கவனம் தேவை.  உறவினர்கள் வருகை இருக்கும். வீடு - மனை - வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மீனம்:
இன்று எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். ஆனால் அதே நேரத்தில் ஓயாத வேலையும்  அலைச்சலும் இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உத்தியோக மாற்றம் உண்டாகலாம். செலவு அதிகரிக்கும்.   பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்