இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 28/09/2020

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (04:30 IST)
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

மேஷம்:
 
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.
 
ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். பிள்ளைகளிடம் பேசும்போது  எச்சரிக்கை தேவை.
 
மிதுனம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். 
 
கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். 
 
சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை.
 
துலாம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்