இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (08-03-2022)!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (06:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று அயல்நாடு சம்பந்தபட்ட செயல்களிலும் ஈடுபடுவீர்கள். ஷேர் துறைகளின் மூலம் நல்ல ஆதாயத்தைக் காண்பீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, பிராணாயாமம் போன்றவற்றை கற்றுக் கொள்ள முயற்சிகள் எடுப்பீர்கள். இறை வழிபாட்டிலும் ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட நிறம்: 3, 5

ரிஷபம்:
இன்று குறுக்கு வழியில் சென்று எந்தச் செயலையும் செய்யாமல் நேர் வழியில் சிந்தித்து செயல்படுங்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவு சீராக இருந்தாலும் வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு ஆட்பட நேரிடலாம். உங்கள் பேச்சினால் பகையை சந்திக்க நேரிடும். கணக்கு வழக்குகளில் சிறு சிக்கல்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட எண்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட நிறம்: 2, 6

மிதுனம்:
இன்று அரசாங்க விஷயங்களில் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்கவும். குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை ஏற்பட்டு வருமானம் வரத் தொடங்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். கடுமையாக உழைத்து செயல்களில் வெற்றிபெற்று நற்பெயர் வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட நிறம்: 1, 5, 6

கடகம்:
இன்று மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்த சக ஊழியர்கள் பகைமை மறந்து நட்புடன் பழகுவார்கள். அலுவலகம் சம்பந்தமான பயணங்களால் நன்மைகளை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட நிறம்: 3, 5, 9

சிம்மம்:
இன்று உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் லாபகரமாகவே அமையும் - வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாண்டால் போதும். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட எண்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 6, 9

கன்னி:
இன்று கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட எண்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 3, 9

துலாம்:
இன்று ஓய்வின்றி உழைப்பீர்கள். ஆனாலும் உங்களின் கடன் பாக்கிகளை சற்று கூடுதல் முயற்சியின் பேரில் செலுத்த வேண்டியது வரும். குடும்பத்தில் எவரிடமும் எதிர்ப்பைக் காட்ட வேண்டாம். உங்களுடைய புகழும், செல்வாக்கும் உயரும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட நிறம்: 1, 5

விருச்சிகம்:
இன்று திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம் முழிக்க வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள்
அதிர்ஷ்ட நிறம்: 5, 6

தனுசு:
இன்று சீரான பலனை காண்பீர்கள். பதவிகள் வந்து சேரும். விடாமுயற்சியுடன் உழைப்பது நல்லது. அதிகமாக தூரம் செல்ல வேண்டியதிருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நற்பலனை பெறலாம். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட எண்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட நிறம்: 2, 7

மகரம்:
இன்று அதிகமாக சிரத்தை எடுத்து மேலிடத்திற்கு விஷயங்களை சொல்ல வேண்டியதிருக்கும். முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண்: நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 2, 9

கும்பம்:
இன்று பங்குதாரர்களிடம் யதார்த்த நிலையை கடைபிடிக்கவும். எந்தவொரு விஷயத்திலும் ஆராய்ந்து முடிவெடுக்கவும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். மிக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட நிறம்: 9, 3

மீனம்:
இன்று இரவு நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். வெளியூர் சென்று தங்கியிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 4, 6

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்