போர் நிறுத்தத்திற்கு பணிந்த ஜெலன்ஸ்கி! ரஷ்யாவின் ரியாக்‌ஷன் என்ன? - இன்று அமெரிக்கா பேச்சுவார்த்தை!

Prasanth Karthick

புதன், 12 மார்ச் 2025 (09:50 IST)

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போரில் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.

 

உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா தொடங்கிய போர் மூன்றாண்டுகளை கடந்து விட்ட நிலையில், தற்போது அமெரிக்காவின் அதிபராகியுள்ள டொனால்டு ட்ரம்ப், இரு நாடுகள் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

 

முன்னதாக அமெரிக்காவில் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்படாத நிலையில், உக்ரைனுக்கு வழங்கும் ராணுவ உதவிகளை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்நிலையில் நேற்று நடந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.

 

அதை தொடர்ந்து இன்று ரஷ்யாவுடன் அமெரிக்கா போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்த உள்ளது. உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் மீண்டும் உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்