ஐரோப்பாவை தாக்கிய யூனிஸ் புயல்! – 8 பேர் பலி!

சனி, 19 பிப்ரவரி 2022 (08:54 IST)
ஐரோப்பாவை யூனிஸ் புயல் தாக்கியதால் இங்கிலாந்து முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் யூனிஸ் புயல் தாக்குதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 32 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான புயலாக யூனிஸ் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் வைட் தீவில் 122 மைல் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

யூனிஸ் புயலால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது,. பேருந்து, ரயில், விமான வசதிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. யுனிஸ் புயலின் தாக்கம் நெதர்லாந்து, பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த புயலால் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்