நெதர்லாந்து நாட்டைச் சேர்ன்ட ஒரு நபர் செயற்கை கருத்தரிப்பிற்கு என விந்தணு தானம் மூலம் 550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகெங்கிலும் செயற்கை கருத்தருப்பிற்கு என ஆண்கள் விந்தணுவை தானம் செய்து வருகின்றனர். இதுகுறித்த சினிமா படங்கள் கூட வெளியானது.
இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டில் செயற்கைக் கருத்தரிப்பு விதிகளின்படி, ஓரே நபர் 12 க்கும் அதிகமான பெண்கள் கருத்தரிக்க காரணமாக இருக்ககூடாது என்பதாகும்.
ஆனால், அந்த நாட்டைச் சேர்ந்த ஜோனாதான் ஜேக்கப் மெய்ஜர் (41). கடந்த 2007 ஆம் ஆண்டு விந்தணு தானம் செய்து வருகிறார். இதை தொழிலாகவும் செய்தது வரும் அவர், அந்த நாட்டின் செயற்கைக் கருத்தரிப்பு விதிகளை மீறி ( ஒரே நபர் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாக இருக்ககூடாது). 13 மையங்களில் விந்தணுக்கள் தானம் செய்து, இதுவரை 550 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.
இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளியன்று, நீதிபதி ஹெஸ்ஸலிங் இத்தீர்ப்பளிக்கப்பட்ட நாளில் இருந்து இனிமேல் விந்தணு தானம் அளிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.