உலகின் மிக உயரமான இடத்தில் வானிலை மையம்! – தேசிய புவியியல் கழகம் சாதனை!

வெள்ளி, 20 மே 2022 (15:28 IST)
வானிலை மாறுபாடுகளை அறிய உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

வானிலை மாறுபாடுகள், வெப்பநிலை, காற்றின் வேகம், மழை போன்றவற்றை கணிக்க உலக நாடுகள் வானிலை ஆய்வு மையத்தை அமைத்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் தேசிய புவியியல் கழகம் என்ற அமைப்பு உலகின் மிக ஊயரமான மலை சிகரமான எவரெஸ்ட் மீது தானியங்கி வானிலை ஆய்வு மையத்தை அமைத்துள்ளனர். இதன்மூலம் காற்றின் வெப்பநிலை, காற்றின் வேகம், சூரிய கதிர்வீச்சு போன்றவற்றை துல்லியமாக கணிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் மட்டத்திலிருந்து 8,830 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த வானிலை ஆய்வு மையம் தற்போது உலகிலேயே மிக உயரத்தில் உள்ள வானிலை ஆய்வு மையமாக சாதனை படைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்