85 நாடுகளை உலுக்கும் டெல்டா வகை கொரோனா! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

வெள்ளி, 25 ஜூன் 2021 (13:18 IST)
இந்தியா உள்ளிட்ட 85 நாடுகளில் டெல்டா வகை கொரோனா உள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து மேலும் சில நாடுகளில் கொரோனா திரிபடைந்த நிலையில் அவற்றிற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என பெயரிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் திரிபடைந்த டெல்டா வகை கொரோனா தற்போது உலகம் முழுவதும் 85 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2 வாரத்தில் 11 நாடுகளில் டெல்டா வகை கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஆல்பா வகை வைரஸை விட வரும் காலங்களில் டெல்டா வகை பெரும் தொற்றாக மாறலாம் என கூறப்படுகிறது.

எனவே டெல்டா வகை வரைஸ் பரவலை தடுக்க உலக நாடுகளும், மக்களும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்